1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (17:30 IST)

ரஜினி கட்சி ஆரம்பிப்பது ஏப்ரலில் அல்ல, மே அல்லது ஜூன் தான்: மாறுபட்ட தகவலால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் மாதம் கட்சி ஆரம்பிப்பார் என்றும், ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமான பொதுக்கூட்டம் கூட்டுவார் என்றும், செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வார் என்றும், அவரது கட்சியில் பாமக கூட்டணியில் இணையும் என்றும் இன்று காலையில் தமிழருவி மணியன் கூறிய தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் சற்று முன் பேட்டியளித்த ரஜினி ஆதரவாளர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன், ‘ரஜினிகாந்த் மே அல்லது ஜூன் மாதம்தான் கட்சி ஆரம்பிப்பார் என்றும் அவரது கட்சியில் அதிமுக திமுகவின் அதிருப்தி தலைவர்கள் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ரஜினிகாந்த் வரும் ஏப்ரலில் கட்சி ஆரம்பிப்பார் என்று காலையில் தமிழருவி மணியன் கூறிய நிலையில் தற்போது மே அல்லது ஜூன் மாதம் தான் அவர் இனி கட்சி ஆரம்பிப்பார் என கராத்தே தியாகராஜன் கூறியுள்ள இந்த மாறுபட்ட கருத்துக்களால் ரஜினி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்