தொடர்புடைய செய்திகள்
- ”அதிமுகவை விமர்சனம் செய்ய திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை”.. ஹெச்.ராஜா ஆவேசம்
- கோமியத்தால் புற்று நோயை குணப்படுத்த சுகாதாரத்துறை ஆராய்ச்சி
- சந்திரயான் 2 திட்டத்தால் நாடு ஒன்றுபட்டுள்ளது..மோடி புகழாரம்
- மோடியின் 100 நாள் ஆட்சி – வித்யாசமாக வாழ்த்து சொன்ன ராகுல் காந்தி !
- அந்த ஆசை நிறைவேறாது – ஸ்டாலினுக்கு ஆதரவாக திருமாவளவன் !
”தமிழிசைக்கு மத்திய அமைச்சர் பதவி ஏன் கொடுக்கவில்லை??”.. திருமாவளவன் கேள்வி
தெலுங்கானா கவர்னராக டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றுள்ள நிலையில் “அவருக்கு ஏன் மத்திய அமைச்சர் பதவி அளிக்கவில்லை?” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று கவர்னராக பதவியேற்ற அவர், 6 பேருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ”பாஜக மாநில தலைவராக தீவிர அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் ஆளுநர் பதவி வழங்கியது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ”தமிழிசை துடிப்புடன் செயல்பட பாஜக ஏன் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை தமிழிசைக்கு வழங்கக்கூடாது?? எனவும் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவினர் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என பலர் விமர்சனங்களை எழுப்பிவரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜனுக்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை ஏன் வழங்கூடாது என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
