தொடர்புடைய செய்திகள்
- பிரதமர் மோடி நடிக்கிறார் ... பாஜக., ஆட்சி தோல்விகரமான ஆட்சி - கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு.
- பொருளாதார மந்தத்தில் நாடு ..பாஜக.வுக்கு கொண்டாட்டமா ? - பிரியங்கா காந்தி கேள்வி
- தந்தையின் காலில் விழுந்த கவர்னர் தமிழிசை... கட்சி பேதம் கடந்த பாசம்!
- தெலுங்கானா கவர்னராக பதவியேற்கும் தமிழிசை: குவியும் வாழ்த்துக்கள்
- பாவம் அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க! – பதிலடி கொடுக்க போய் பல்பு வாங்கிய பாஜக
அந்த ஆசை நிறைவேறாது – ஸ்டாலினுக்கு ஆதரவாக திருமாவளவன் !
ப சிதம்பரம் போல திமுக தலைவர் ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்ற பாஜக தலைவர்களின் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது தற்போது வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதைப் பற்றிப் பேசிய பாஜக வின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா சிதம்பரத்துக்கு நேர்ந்த கதிதான் எதிர்க்கட்சி தலைவருக்கும் என மிரட்டும் விதமாகக் கூறினார்.
இதற்கடுத்த நாள் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ‘சிதம்பரம் கைதுக்குப் பின் ஸ்டாலின் மத்திய அரசை மென்மையாக விமர்சிக்கிறார்’ எனக் கூறினார். இதையடுத்து ஸ்டாலின் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி தமிழக அரசியல் சூழலில் எழுந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் திமுக கூட்டணியில் உள்ளவருமான தொல் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று பேசிய அவர் ‘ஸ்டாலினைக் கைது செய்யவேண்டும் என்பது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம். ஆனால் அது நிறைவேறாது’ எனத் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
