புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (15:32 IST)

கேஸ் போட்ட திருமா... அடுத்தடுத்த நெருக்கடியில் அதிமுக!

உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேருராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்தது. 
 
இந்நிலையில் இதனை எதிர்த்து உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
மேலும், மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை. மறைமுக தேர்தல் குறித்து அவசர சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் மாநகராட்சி, நகராட்சிக்கு நேர்முகத்தேர்தல் தான் நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.