செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2019 (10:57 IST)

ஊரை கூட்டி திருமாவளவனுக்கு சடங்கு? எல்லை மீறும் அர்ஜூன் சம்பத்!

திருமாவளவன் இந்து கோயில் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் இந்து சமயத்தில் இருந்து அவரை விலக்கி வைப்பதாக இந்து மக்கள் கட்சி சார்பில் சடங்கு ஒன்று நடத்தப்பட இருக்கிறதாம். 
 
சமீபத்தில் விசிக மகளீர் அணி கூட்டத்தில் தொல்.திருமாவளவன் இந்து கோவிலை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனங்களுக்கு உள்ளானது. இதன் பின்னர் அவர் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்து வருத்தத்தியும் கோரினார். இருப்பினும் இதை விடுவதால் இல்லை சிலர். 
 
அதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தும் ஒருவர். ஆம், இணையதளத்தில் பத்திரிக்கை ஒன்று வைரலாகி வருகிரது. அதில், கள்ளக்குறிச்சி உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை இந்து கோவில் மற்றும் இந்து மதத்தை பற்றி அவதூறு கருத்து தெரிவித்த திருமாவளவனை இந்தி சமயத்தில் இருந்து விலக்கி வைக்கும் சம்பிரதாய சடங்கு நடைபெற உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்த பத்திரிக்கை பலருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த நிகழ்வில் சமய ஆர்வலர்கள், ஆன்மீகவாதிகள் பலர் கலந்துக்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.