1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thirumavalavan Criticizes PMK's Shift from Left to Right-Wing Politics

இது அவர்கள் குடும்ப விவகாரம், கருத்து சொல்ல விரும்பவில்லை: பாமக குறித்து திருமாவளவன்

திருமாவளவன்
பாட்டாளி மக்கள் கட்சியில்யில் தற்போது நடந்து வருவது உட்கட்சி விவகாரமா அல்லது குடும்ப விவகாரமா என்பதைப் பற்றி நான் தலையிட விரும்பவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 
ஆனால், அதே நேரத்தில், பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கும் போது இடதுசாரி சிந்தனையுடன் தொடங்கப்பட்டது என்றும், ஆனால் இப்போது பிரச்சனையை தீர்க்க நடுவராக செயல்பட்டு வருபவரை பார்க்கும் போது, அந்த கட்சி வலதுசாரி சிந்தனைக்கு மாறிவிட்டது போல் தெரிகிறது என்றும் தெரிவித்தார்.
 
வலதுசாரி அரசியலுக்கு அவர்கள் முழுமையாக போய்விட்டார்கள் என்பதை, பஞ்சாயத்தாரின் முயற்சி மூலம் வெளிப்பட்டு உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி இடதுசாரி சிந்தனைகளால் தான் எழுச்சி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இப்போது அது வலதுசாரி இயக்கமாக மாறிவிட்டது. அதன் அடிப்படையில் பஞ்சாயத்து செய்யக்கூடியவர்கள் இன்றைக்கு வெளிப்படையாக, அம்பலமாகி இருக்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கு வெளிச்சமாகி உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
 
பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஆடிட்டர் குருமூர்த்தி பஞ்சாயத்து செய்ததையே திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்தக் கருத்துக்கு பாமக தரப்பிலிருந்து என்ன விளக்கம் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!