1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Anbumani and Ramadoss Hold Reconciliation Talks Amid PMK Leadership Rift

ராமதாஸ், அன்புமணி திடீர் சந்திப்பு.. தந்தை - மகன் சமாதானம் ஆகிறார்களா?

Ramadoss Anbumani Clash
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கும், அவருடைய மகனும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்த நிலையில், தனது தந்தை மீது எந்த விதமான விமர்சனமும் வைக்காமல் அமைதியாக இருக்கிறார்.
 
இந்த நிலையில், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் பதவியில் இருந்து நீக்கிய நிலையில், "கட்சிக்கு நான்தான் தலைவர்" என்று அன்புமணி தெரிவித்தார்.
 
இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றிக்கொண்டே இருந்தபோதும், கட்சியின் முக்கிய பிரமுகர்களின் அறிவுரைக்கு ஏற்ப தற்போது இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாகவும், தைலாபுரம் இல்லத்தில் அன்புமணி தனது தந்தையை சந்தித்து சமரச பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்றும், தந்தை மகன் இடையே சமாதானம் ஏற்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மீண்டும் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இனி உச்சம் தான் அடுத்த இலக்கு..!