1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Key PMK Leaders Hold Reconciliation Talks at Ramadoss Residence

ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைச்சாமி, ராமதாஸ் வீட்டிற்கு வருகை.. தீவிர ஆலோசனை..!

பாமக
இன்று காலை ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது ராமதாஸ் வீட்டிற்கு ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோர் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
விழுப்புரம் தைலாபுரம் ராமதாஸ் இல்லத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி வருகை தந்ததாகவும், அவர் ராமதாஸிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
அதேபோல், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைச்சாமியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகவும், அது மட்டும் இன்றி ராமதாஸ் மூத்த மகள் காந்திமதி, அன்புமணியின் மகள் சஞ்சுத்ரா உள்பட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாமக நிர்வாகிகள், பேராசிரியர் தீரன் உள்பட சிலர் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
சுமார் ஒரு மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதன் பின் ஆடிட்டர் குருமூர்த்தி சில முக்கிய ஆலோசனையை ராமதாஸிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில், அன்புமணி – ராமதாஸ் இருவரும் நேரில் சந்தித்து சமரசம் செய்து கொண்டதாகவும், இனிமேல் பாமக ஒற்றுமையாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
அனைத்து ஏடிஎம்களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும்! - வங்கிகளுக்கு RBI அதிரடி உத்தரவு!