1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 மே 2023 (10:58 IST)

பாஜகவுடனான கூட்டணியை இனிமேலாவது மறுபரிசீலனை செய்க: அதிமுகவுக்கு திருமாவளவன் அறிவுரை..!

கர்நாடக மாநில தேர்தல் முடிவை பார்த்தாவது பாஜக உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்க என அதிமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவுரை கூறியுள்ளார். 
 
பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கர்நாடக தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னறிவிப்பாக இருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். பிரித்தாலும் சூது மற்றும் சூழ்ச்சி நீண்ட காலம் நிலைக்காது என்பதற்கு கர்நாடகா மக்களின் தீர்ப்பு ஒரு சாட்சி என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 பாஜகவுடன் கூட்டணி என்பதை அதிமுக தலைவர்கள் ஏற்கனவே உறுதி செய்துள்ள நிலையில் திருமாவளவனின் அறிவுரைக்கு பின்னர் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
மேலும் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட ஒரு சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva