திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 13 மே 2023 (18:23 IST)

பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது - உதயநிதி

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில்  பாஜக தோல்வியுற்ற நிலையில் பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது  என்று அமைச்சர் உதயநிதி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல்  கடந்த 10 ஆம்  தேதி நடைபெற்ற நிலையில், இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே போட்டி இருந்த நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 66 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

எனவே, காங்கிரஸ் 137 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இதை அக்கட்சியினர்  நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

காங்கிரஸின் வெற்றிக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின் வாழ்த்துகள் கூறியிருந்தார். அதில், திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள  இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எனது வாழ்த்துகள். சர்வாதிகாரம் - மதவாதம் - மக்களைச் சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும். பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது ‘’ என்று தெரிவித்துள்ளார்.