அண்ணாமலையை கர்நாடகாவுக்கு அழைத்து வரும் ஐடியாவை கொடுத்தவருக்கு நன்றி: காங்கிரஸ்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் என்பதும் அவர் பாஜக வெற்றி பெறுவதற்காக தீவிரமாக வேலை செய்தார் எதுவும் தெரிந்ததை.
ஆனால் அண்ணாமலை வேலை செய்த தொகுதியிலேயே பாஜக பெரும் தோல்வி அடைந்துள்ளது என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் பொறுப்பாளர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளராக அண்ணாமலையை அழைத்துவரும் ஐடியாவை கொடுத்தவருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ததால் தான் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 10 முதல் 20 இடங்கள் கிடைத்துள்ளது என்றும் ஜெகதீஷ் ஷட்டர் போன்ற மூத்த தலைவர்களை அவமானப்படுத்தும் விதமாக பேசி கர்நாடக மாநில பாஜகவை ஒழிக்கும் வேளையில் அண்ணாமலை செயல்பட்டார் என்றும் அண்ணாமலைக்கும் தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva