ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 13 மே 2023 (20:53 IST)

காங்கிரஸுக்கு வாழ்த்துகள் கூறிய நடிகர் விஜயகாந்த்

கர்நாடக மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல்  கடந்த 10 ஆம்  தேதி நடைபெற்ற நிலையில், இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே போட்டி இருந்த நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 66 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

எனவே, காங்கிரஸ் 137 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இதை அக்கட்சியினர்  நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில்,கர்நாடக மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

''கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை  காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  கர்நாடகா மக்களின் எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் கட்சி பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.