1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. recounting in jayanagar constituency bjp candidate win

160 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் தோல்வி.. மறு எண்ணிக்கையில் 16 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..!

பாஜக
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று எண்ணப்பட்ட நிலையில் பாஜக வேட்பாளர் ஒருவர் 160 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரிக்கை விடுத்தார். 
 
அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு மறுவாக்கு எண்ணப்பட்ட நிலையில் பாஜக வேட்பாளர் 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெங்களூர் நகரின் ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி முதலில் 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பாஜக வேட்பாளர் சிகே மூர்த்தி குறைந்த வாக்குகள் வித்தியாசம் இருப்பதால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 
 
இந்த கோரிக்கையை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதை அடுத்து மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டது. இதனை அடுத்து மறு வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் சிகே ராமமூர்த்தி 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஜெயநகர் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இன்று கரை கடக்கும் மோக்கா புயல்! அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு!