1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thirumavalan and some other leaders arrested

ரத யாத்திரை எதிரொலி: திருமாவளவன் உள்பட முக்கிய தலைவர்கள் கைது

rath yatra
விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் ரதயாத்திரை இன்று கேரளாவில் இருந்து தமிழக எல்லையான செங்கோட்டையில் நுழையும் என்று கூறப்படும் நிலையில் இதனை அடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்றிரவு முதல் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைந்தால் அதனை தடுக்கும் வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் நெல்லை மாவட்டத்திற்கு விரைந்தனர்

இந்த நிலையில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கைது செய்யப்பட்டார். அதேபோல் மனித உரிமை கட்சி தலைவர் ஜாஅஹிருல்லா, தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர்களும் கைது செய்யப்பட்டனர்,. மேலும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நெல்லை எல்லையில் சோதனை சாவடி ஏற்படுத்தப்பட்டு தகுந்த சோதனைக்கு பின்னரே வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
சொத்துக்காக 90 வயது பாட்டியை அடித்து துன்புறுத்திய பேத்தி கைது