புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 மார்ச் 2018 (14:52 IST)

பிடிபட்ட தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள்: இனியாவது விடிவுகாலம் பிறக்குமா?

கோடீஸ்வர்களாக இருந்த பல தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை தெருக்கோடிக்கு வரவழைத்ததில் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களுக்கு பெரும் பங்கு உண்டு. கோடி கோடியாய் செலவு செய்து கஷ்டப்பட்டு தயாரித்த ஒரு திரைப்படத்தை ஒருசில ஆயிரங்கள் விளம்பர வருமானத்திற்காக ரிலீஸ் ஆன தினமே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு வந்தனர். இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில் திரையுலகினர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர்களை பிடித்தே தீருவேன் என்று விஷால் சபதமிட்ட நிலையில் ஒருவழியாக நேற்று கூண்டோடு மாட்டிவிட்டனர்.

நேற்று தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் 5 பேரை கேரள கிரைம் பிரான்ச் ஆண்டி பைரசி செல் சூப்பர்டென்ட் B.K. பிரஷாந்த் காணி தலைமையிலான குழு  நேற்று திருநெல்வேலியில்  சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தது.

கைது செய்யப்பட்ட ஐந்து பேர் இவர்கள் தான்:

1. கார்த்தி வயது 24 ( விழுப்புரம் )
2. சுரேஷ் வயது 24
3. TN Rockers பிரபு வயது 24
4. DVD Rockers ஜான்சன் வயது 30 ( திருநெல்வேலி )
5. மரிய ஜான் வயது 22.

இவர்கள் Tamil Rockers.IN , Tamil Rockers.AC , Tamil Rockers.NE , Tamil Rockers.CO , Tamil Rockers.IS , Tamil Rockers.US , Tamil Rockers.RO போன்ற 19 Domainகளை பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து இனியாவது திரையுலகிற்கு விடிவுகாலம் பிறக்குமா? அல்லது இன்னும் மிச்சம் மீதி அட்மின்கள் இருக்கின்றார்களா? என்பது இனிமேல்தான் தெரியும