ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (11:56 IST)

நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு! முதல் அரசியல் கூட்டம் நெல்லையிலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு மாவட்டத்தின் நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டு வருகிறார். இந்த நியமனங்கள் முடிந்த பின்னர் முறைப்படி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தனது அரசியல் கட்சி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் திடீரென சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சென்னை ராகவேந்திர திருமண மண்டபத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளார்.

கமல்ஹாசன் தனது முதல் அரசியல் பொதுக்கூட்டத்தை மதுரையில் பிரமாண்டமாக நடத்திய போலவே ரஜினியும் தென் மாவட்டம் ஒன்றில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அவர் தேர்வு செய்த இடம் திருநெல்வேலி என்றும் இதுகுறித்து ஆலோசனை செய்யவே நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது