1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (14:50 IST)

2 மகள்களுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த தாய்: குமரியில் ஒரு பரிதாப சம்பவம்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு மகள்களுடன் தாய் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கன்னியாகுமரி அருகே அஞ்சு கிராமம் என்ற பகுதியைச் சேர்ந்த  ஏசுதாசன் - அனிதா தம்பதிக்கு சகாய திவ்யா, சகாய பூஜா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்
 
 இந்த நிலையில் அனிதா கணவர் ஏசுதாசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் மகளுடன் அனிதா வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு  அனிதா வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததை அடுத்து அந்த பகுதி மற்றும் சந்தேகம் அடைந்தனர்
 
கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனிதா மற்றும் அவரது இரண்டு மகள்களும் தூக்கில் தொங்கி பிணமாக இருந்தனர். இதனை அடுத்து அந்த வீட்டில் இருந்த கடிதத்தை வைத்து பார்த்தபோது  தன்னால் குடும்பத்தை சரிவர கவனிக்க முடியவில்லை என்றும் குடும்பம் மிகவும் அருமையாக இருப்பதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran