1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Neet exam son and father suicide

நீட் தேர்வில் தோல்வி: அடுத்தடுத்து மகனும் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!

நீட் தேர்வு
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அடுத்தடுத்து மகன் மற்றும் தந்தை என இருவரும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சென்னை குரோம்பேட்டை அருகே நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நீட் தேர்வுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் போராடியும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்துவதில் உறுதியாக உள்ளது. இந்த நிலையில் சென்னை புரோம்பேட்டை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்  நீட் தேர்வு தோல்வியால்  ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.  
 
இந்த நிலையில் மகன் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் இருந்த அவரது தந்தை செல்வ சேகர் என்பவரும் நேற்று இரவு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 
 
அடுத்தடுத்து மகன் மற்றும் தந்தை ஆகிய இருவருமே  நீட் தேர்வால் உயிர் இழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகனின் சாவுக்கு நீட் தேர்வு தான் காரணம் என அவர் சமீபத்தில் பேட்டி அளித்திருந்த நிலையில்  அவர் இந்த தற்கொலை முடிவு எடுத்துள்ளார் என்பது பெரும் சோகத்திற்கு உள்ளானது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கனமழை எதிரொலி.. சென்னையில் இன்று பள்ளிகள் விடுமுறையா? கலெக்டர் விளக்கம்..!