1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (16:57 IST)

நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் - அமைச்சர் உதயநிதி

udhayanithi
நீட் தேர்வை ரத்து செய்யும்வரை  நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் போராடியும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்துவதில் உறுதியாக உள்ளது. இந்த நிலையில் சென்னை புரோம்பேட்டை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்  நீட் தேர்வு தோல்வியால்  ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து  மகன் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் இருந்த அவரது தந்தை செல்வ சேகர் என்பவரும் நேற்று இரவு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகிறாது.

இவர்களின் உயிரிழப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி  நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நீட் தேர்வை ரத்து செய்யும்வரை  நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்… நீட் தேர்வுக்கு மேலும் ஒரு மாணவர் உயிரிழந்திருப்பது வருத்தத்திற்குரியது. மக்களின் மனநிலை தெரியாமல் ஆளுநர் ரவி இருக்கிறார்'' என்று கூறினார்.

மேலும், ''மாணவர்கள் பொறுமையாக இருங்கள்  முதல்வர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் ''என்று கூறினார்.