புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (10:18 IST)

தென்காசியில் உள்ள தெருவுக்கு பிரதமர் மோடி பெயர்! – வைரலாகும் புகைப்படம்!

தென்காசியில் உள்ள தெரு ஒன்றிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிரபலமான முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல் தலைவர், சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளிட்ட பலரது பெயரை தெருவுக்கு சூட்டுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு தெருக்களுக்கு பெயர் சூட்டப்படுகின்றன.

நாட்டின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு பலர் கோவில் கட்டி வந்த நிலையில் தென்காசியில் தெரு ஒன்றிற்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்காசியில் உள்ள வேலம்மாள் நகரில் உள்ள தெரு ஒன்றிற்கு மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோடி தெரு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.