1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (11:15 IST)

டாகடர் வியாபாரம் 70 கோடி… ஆனால் தயாரிப்பாளருக்கு லாபம் இவ்வளவுதான்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்துள்ளதை அடுத்து திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் 7.45 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் 2வது நாளில் முதல் நாள் வசூலை விட அதிகமாக வசூல் செய்தது. 

இதனிடையே சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் இதுவரை 63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் தியேட்டர்களில் வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த 5 படங்களில் டாக்டர் படமும் ஒன்று என்று கூறப்படுகிறது.  இந்த படம் தீபாவளி வரை திரையரங்குகளில் ஓடினால் மொத்தமாக 70 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என சொல்லப்படுகிறது.

ஆனால் இவ்வளவு வசூலித்தும் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு பெரிய லாபம் எல்லாம் கிடைக்காதாம. அதிகபடியாக 5 கோடி ரூபாய் கிடைத்தாலே பெரிய விஷயம் என்கின்றனர். ஏனென்றால் இந்த படம் ஒரு வருடத்துக்கும் மேலாக முடங்கி கிடந்ததால ஏகப்பட்ட பிரச்சனைகள், கடன் சுமைகளை தாண்டிதான் ரிலீஸ் ஆகியுள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு பல வழிகளில் நடக்க வேண்டிய வியாபாரம் நின்றுவிட்டது அல்லது குறைந்துவிட்டது என சொல்லப்படுகிறது.