1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (10:22 IST)

மோடி கொண்டாட வேண்டிட வேண்டிய 100s... லிஸ்ட் போட்டு கொடுத்த ப.சி!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை கடந்ததை பிரதமர் மோடி அமைச்சர்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என ப.சிதம்பரம் டிவிட். 

 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பெட்ரோல் விலை 105 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது. இந்நிலையில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
 
100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை அமைச்சர்களுடன் இணைந்து கொண்டாடும் பிரதமர் மோடி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் கொண்டாட வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1000 ரூபாயை தாண்டும் போது கொண்டாட மற்றொரு வாய்ப்பு இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.