திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (11:42 IST)

100 கோடி தடுப்பூசிகள்... மோடி பாராட்டு

9 மாதங்களுக்குள் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்ததற்கு மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

 
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் நீடித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான அளவு தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதுடன் மெகா முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் நேற்று வரை இந்தியா முழுவதும் 99,12,82,283 தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளை கணக்கிட்டால் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட வீதம் 100 கோடியை தாண்டியுள்ளது. 9 மாதங்களுக்குள் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதனால் #VaccineCentury என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
 
இதனிடையே இதற்கு மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது. இந்தியாவின் விஞ்ஞானம், சுறுசுறுப்பு, 130 கோடி மக்களின் உற்சாகமே சாதனைக்கு காரணம். வாழ்த்துகள் இந்தியா. 100 கோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம். மருத்துவர்கள், செவிலியருக்கு நன்றி. இந்த சாதனையை எட்ட உதவி ஒவ்வொருவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.