திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (20:33 IST)

சாணிப்பவுடர் கலந்து கூட்டஞ்சோறு சாப்பிட்ட மாணவர் ... அதிர்ச்சி சம்பவம்

கோவை  மாவட்டம் தடாகம்  பகுதி அருகே, 6 மாணவர்கள் சேர்ந்து, தடைசெய்யப்பட்ட சாணிப்பவுடரை  கூட்டாஞ்சோற்றில் கலந்து  சாப்பிட்டனர். இதனால் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் தடாகம் அருகே உள்ள திருவள்ளூவர் நகரில் வசித்து வந்த சிறுவர், சிறுமியர் 6 பேர், கூட்டாஞ்சோறு சமைத்துள்ளனர். அதில் மஞ்சத்தூள் சேர்ப்பதற்குப் பதிலாக அரசால் தடைசெய்யப்பட்ட சாணி பவுடரை கலந்ததாகத் தெரிகிறது. இதனால் சிறுவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
பின்னர் உடனடியாக சிறுவர்களைக் கவனித்த பெற்றோர், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அதனால் சிறுவர்கள் காப்பாற்றப்பட்டனர்.  இதுகுறித்து தடாஅம் போலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.