வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், சில நாட்களாக வெப்பநிலை குறைந்து வருவதைப் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், வங்கக் கடலில் நிலவும் மேலடுக்க சுழற்சி காரணமாக தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும், வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினால், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும், கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வெப்பநிலை நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva