ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!
தமிழகத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் பிதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், ஊட்டியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் இதற்கு விளக்கம் அளித்தார்.
ஊட்டியில் ₹727 கோடி மதிப்புள்ள புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், அதன் பின்னர் உரையாற்றினார்.
ஊட்டி விழாவில் பங்கேற்றதால் பாம்பன் புதிய ரயில் பாதை திறப்பு விழாவிற்கு செல்ல முடியவில்லை என்றும், இதனை முன்னதாகவே பிரதமர் மோடிக்கு தெரிவித்துவிட்டேன் என்றும் அவர் கூறினார்.
ஆனால் அதே நேரத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் பாம்பன் ரயில் பால திறப்பு விழாவிற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
பாம்பன் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, திருவள்ளுவர் உருவ சிலையை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva