ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (08:30 IST)

நீட் தேர்வு நல்லதுதான்: விஜயகாந்த் அறிக்கையால் அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்

தமிழக அரசியல்வாதிகளின் கோரிக்கைகளில் ஒன்று நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பதுதான். உண்மையிலேயே மாணவர்களின் நலனுக்காக இந்த கோரிக்கையை அரசியல்வாதிகள் வைக்கின்றார்களா? அல்லது தங்களது சுயநலத்திற்காக இந்த கோரிக்கை வைக்கப்பட்டதா? என்பது மக்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றாக தெரியும்
 
நீட் தேர்வு வந்த பின்னர்தான் மெடிக்கல் கல்லூரிகளில் பேமெண்ட் சீட் என்ற ஒன்று அழிக்கப்பட்டது. இதனால் பெரும் நஷ்டம் அடைந்த மெடிக்கல் கல்லூரிகளை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் செய்யும் சதிதான் நீட் தேர்வு வேண்டாம் என கூறுவதற்கு முக்கிய காரணம். மேலும் நீட் தேர்வுக்கு பின்னர் 11ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 12ஆம் வகுப்பு பாடங்களை மட்டுமே நடத்தும் பள்ளிகளுக்கும் ஆப்பு வைக்கப்பட்டது. நீட் தேர்வால் முதல் ஆண்டு மாணவர்கள் கொஞ்சம் தடுமாறினாலும் புதிய பாடத்திட்டம் வந்தபின்னர் அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்று வந்துள்ளனர். மேலும் நீட் தேர்வை எதிர்த்து இதுவரை மாணவர்கள் எந்த போராட்டமும் நடத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நீட் தேர்வு அவசியமானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அவர் தனது அறிக்கையில், 'சாதாரண ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை நீட் தேர்வு உருவாக்கியுள்ளதாகவும், எல்லாவற்றையும் அரசியலாக பார்க்காமல் மாணவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு தமிழக அரசு கூடுதல் பயிற்சி அளித்து மாணவர்களை ஊக்கப்படுத்தினால் மாணவர்கள் அதிகளவில் சாதிப்பார்கள் என்றும் விஜயகாந்த் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.
 
விஜயகாந்தின் இந்த அறிக்கை, நீட் தேர்வை எதிர்த்து வரும் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது