1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (16:53 IST)

வெற்றி கனியை பறிப்பது மட்டுமே பணி.! நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.! டிடிவி தினகரன்..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் - அமமுக பொதுச் செயலாளரும் தேனி பாராளுமன்ற வேட்பாளருமான டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.
 
முன்னதாக உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
 
தொடர்ந்து இந்த கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், அமமுக துரோகத்தை எதிர்த்து உருவாக்கிய களம், அதிமுக உருவானது துரோகத்தால் தான் என்றார்.
 
ஆட்சி ஆட்டம் கண்ட போது அவர்களை பாதுகாத்தவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும் என்றும் ஒபிஎஸ்-க்கும் துரோகம், டெல்லியில் உள்ளவர்களுக்கும் துரோகம் செய்துவிட்டனர் என்றும் எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் விமர்சித்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று மக்கள் அமைத்த வியூகம் தான் என்றும் நான் தேர்தல் வியூகம் அமைக்கவில்லை என்றும் கூறினார்.

 
எங்களது பணி வெற்றி கனியை பறிப்பது மட்டுமே, யார் யாரோ பேசுவதற்கு நான் பதில் சொல்லி உங்கள் நேரத்தையும், என் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்தார்.