வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 மார்ச் 2024 (09:52 IST)

அமமுக போட்டியிடும் 2 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு.. திருச்சியில் போட்டி யார்?

dinakaran
பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுவதாகவும் அக்கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் என்பவர் திருச்சி தொகுதியில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரும் விரைவில் பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வேட்பாளர் அறிவிப்பு அறிவிப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ’இப்போது அம்மா இல்லை, ஆனால் நம்மோடு பிரதமர் இருக்கிறார் என்று கூறினார். அதுமட்டுமின்றி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லாமல் தான் இருந்தேன், ஆனால் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் என்னை தேனியில் போட்டியிட அழைத்தனர் அதனால் தான் போட்டியிடுகிறேன் என்றும் தெரிவித்தார்.

Edited by Siva