வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (23:35 IST)

ஆளுநரை கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

mk stalin
வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றிருக்கவேண்டும் என்று தமிழக ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.  இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
தமிழ் நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக  உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில், சமீபத்தில் தொகுதிப் பங்கீடுகள் கையெழுத்தாகின. நேற்று திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
 
திருவாரூர் மற்றும்  நாகை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில்,  இன்று நடைபெற்று வரும் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர்,

''பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமே  இருக்காது; பாஜகவுக்கு போடக்கூடிய ஓட்டு தமிழ்நாட்டிற்கு வைக்கக்கூடிய வேட்டு என்று கலைஞரின் வரிகளில் பிரதமர் மோடியை  எச்சரித்தார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு  ஜெராக்ஸ் காப்பி என்று கூறி இபிஎஸ் செய்த செயல்களை பட்டியலிட்டார்.
 
சமீபத்தில் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது எனறு முதல்வரின் கடிதத்திற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்..என்.ரவிக்கு  உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தது.
 
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  கூறியதாவது: இதுவரை எந்த ஆளுநராவது உச்ச நீதிமன்றத்தால் இவ்வளவு கண்டனத்திற்கு உள்ளாகி இருப்பார்களா என்பது சந்தேகம்தான். வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றிருக்கவேண்டும்; ஆளுநர் மாளிகையில் இருந்து பிரசாரம் தொடங்கியது என்று கூறினார்.