வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (16:37 IST)

தொடரும் பிரபலங்களின் மரணம்.! உயிரிழந்த காமெடி நடிகர்.! திரை பிரபலங்கள் அதிர்ச்சி..!!

Seshu Death
லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60.
 
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது நடிகர் சேஷூவிற்கு
மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 
 
அப்போது அவருடைய இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சேஷூ இன்று காலமானார். சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருந்தார்.


இவரின் காட்சிகளுக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.