1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: ஞாயிறு, 3 மே 2020 (17:34 IST)

காய்கறிகளை இலவசமாக தந்து வரும் பசுமைக்குடி கிராமம் !

ஏற்கனவே ஏராளமானோருக்கு 2 ஆயிரம் நபர்களுக்கு மேல் இலவச இயற்கை காய்கறிகளை கொடுத்த பசுமைக்குடி தற்போது 144 தடை உத்திரவிலும் இயற்கை காய்கறிகளோடு, அத்திவாசிய மளிகை பொருட்களையும் கொடுத்து வருகின்றது ! 
நஞ்சில்லா உணவு நோயற்ற வாழ்வு ! 

இன்றும் காய்கறிகளை இலவசமாக தந்து வரும் பசுமைக்குடி கிராமம் !

அமெரிக்காவிற்கு சென்றாலும் பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் நரேந்திரன் கந்தசாமி ! ஊரில் உள்ள பொது இடத்தில் சமுதாய இயற்கை காய்கறி தோட்டத்தினை அமைத்து பசுமைக்குடி என்று ஊர் பெயரையே மாற்றிய இயற்கை நல ஆர்வலர்

 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் வட்டம், வரவணை பஞ்சாயத்திற்குட்பட்ட, வ.வேப்பங்குடி என்கின்ற கிராமத்தில் வசித்து வந்த நரேந்திரன் கந்தசாமி, கடந்த 2010 ம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டில், கணினி ஆலோசகராக வேலைகிடத்த நிலையில், அங்கு சென்று ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகளுக்கும் சென்ற அவர், சுவிட்சர்லாந்தில் நிலவிய இயற்கை சூழலை பார்த்து தனது ஊரினையும் இப்படி மாற்ற வேண்டுமென்றும், எண்ணம் தோன்றியதையடுத்து தற்போது அமெரிக்கா நாட்டின் ஹரிசோனா மாகானத்தில் பணியாற்றும் நரேந்திரன் கந்தசாமி, தனது ஊரினையும் இப்படி மாற்ற வேண்டுமென்றும் என்று கடந்த 2017 ம் ஆண்டு பூவரசு, ஆலம், வேம்பு என்று பலவகை மரங்களை 10 அடி வளர்த்து ஊர் முழுவதும் நட்டனர். வ.வேப்பங்குடி என்கின்ற ஊர் பெயரை பசுமைக்குடி என்று பெயரையும் மாற்றினர். மேலும் இந்த ஊரில் எந்த சாகுபடியும் விளையாது என்ற பட்சத்தில், எப்போதுமே இந்த பகுதி வறட்சி மிகுந்த பகுதியானது ஆகும், எந்த அடிப்படை வசதியுமே கிடைக்காத நிலையில்., ஆடு, மாடு சாண எருவை மட்டுமே போட்டு, முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்து இந்த ஊரில் பொது இடத்தில் அதாவது 128 நபர்களுக்கு சொந்தமான இடத்தில் சமுதாய காய்கறி தோட்டம் என்று பெயர் வைத்து அதை உருவாக்க வேண்டுமென்று சுமார் 10 செண்ட் நிலத்தில் சமுதாய காய்கறி தோட்டத்தினை உருவாக்கி, அதில் பசுமைக்குடி தன்னார்வலர்கள் வேல்முருகன், காளிமுத்து, கவிநேசன், தங்கவேல், வெற்றிவேல் உள்ளிட்ட 15 தன்னார்வலர்கள் அங்குள்ள அனைத்து காய்கறிகளையும் அங்குள்ள மக்களுக்கு வாரத்திற்கு இரண்டு தடவை காய்கறிகளை பறித்து அங்குள்ள வீடுகளுக்கு இலவசமாக வழங்கிய நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் காய்கறிகளுக்கு ஊரே, காய்கறிகளுக்கு ஏங்கிய நிலையில், இந்த வ.வேப்பங்குடி என்கின்ற பசுமைக்குடி கிராமம் ஆனது எந்த வித பிரச்சினையும் இல்லாமல், காய்கறிகளை இலவசமாக விநியோகித்தது. இது மட்டுமில்லாமல், இதே கிராமத்தில் உள்ள 450 குடும்பங்களுக்கும் மளிகை பொருட்கள், அத்தியாவசிய தேவையான பொருட்கள் என்று ஆங்காங்கே அரசியல் கட்சியினர் வழங்கிய நிலையில், இங்குள்ள பசுமைக்குடி அமைப்பினர் தாமாகவே முன்வந்து உதவி அனைவருக்கும் இலவசமாக கொடுத்தனர்.

மேலும், அமெரிக்காவில் இருக்கும் நரேந்திரன் கந்தசாமி நரேந்திரன் கந்தசாமியின் தந்தையும், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், வரவணை பஞ்சாயத்து தலைவருமான கந்தசாமி., தெரிவிக்கையில்,. இயற்கை முறையில் காய்கறி தோட்டம் இந்த பசுமைக்குடி என்கின்ற பகுதியில் அமைத்து, அதுவும் பொதுவான இடத்தில் இங்கு விளையும் காய்கறிகள் அனைத்தும் அந்த ஊர் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசம், இது பொதுவானது, இங்கு விளைபவன அனைத்தும் இந்த ஊர் மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 20 செண்ட் அளவில் விஸ்தரிப்பு செய்யப்பட்டு உழவு ஓட்டும் நிலையில் தற்போது தயராகி வரும் இந்த பசுமைக்குடி அமைப்பினர் ஏற்கனவே 2 ஆயிரம் மக்கள் இந்த காய்கறிகளை இலவசமாக பெற்று பயனடைந்தவர்கள். ஆனால் தற்போது வரும் அறுவடையில் 5 ஆயிரம் மக்கள் இந்த காய்கறிகளை இலவசமாக பெற்று பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார். 

மேலும், இதே இயக்கத்தினை சார்ந்த பசுமைக்குடி தன்னார்வலர் வேல்முருகன் என்பவர் கூறும் போது., இந்த அமைப்பில் தன்னார்வலர் என்பதில் தான் பெருமை கொள்வதாகவும், சமுதாய பணிகள் செய்வதற்காக துவங்கப்பட்ட இந்த இயக்கம் அமெரிக்காவில் உள்ள நரேந்திரன் கந்தசாமியின் சொந்த செலவு தான் என்றார். இயற்கை முறையில் விளையும் காய்கறிகளை மக்களுக்கு கொடுப்பதும் மரக்கன்றுகளை நடுவதும் முக்கியத்துவம் கொண்டது ஆகும், ஆங்காங்கே உள்ள வீடுகளில் விதைகளை நட இடம் இல்லாத நிலையில்., அவர்களுக்காக இந்த சமுதாய காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இங்குள்ளவர்களுக்கு குடும்பத்தினருக்கு மூன்றுவகையான மரங்களை கொடுத்து அதில் இரண்டு வகையான பயன்கள் பெறுவார்கள். அதில் பழங்கள் மற்றொன்று நிழல்கள் தரும் மரங்கள் ஆகும், பசுமைப்பணி எங்களது இயக்கம் செம்மையாக உள்ளதாகவும், தற்போது இன்னும் விரிவு படுத்தி, வரவணையில் உள்ள அனைத்து குக்கிராமத்திற்கும் இந்த காய்கறிகளை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதுமட்டுமில்லாமல்,. கரூர் மாவட்டத்தில் உள்ள மற்ற தன்னார்வலர்களும் இணைந்து அவர்களுக்கும் தோள் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 

மேலும், இதே ஊரினை சார்ந்த குணசேகரன்., கூறும் போது., 144 தடை உத்திரவிலும் சமையற்பொருட்களும், இயற்கை காய்கறிகளும் இலவசமாக கொடுப்பது மேலும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், இந்த பசுமைக்குடி அமைப்பு ஆனது வந்த பிறகு சத்துமிக்க காய்கறிகளை இலவசமாக வாங்கி கொள்கின்றோம் என்றதோடு, அமெரிக்காவில் இருந்தும் பிறந்த ஊருக்கு உதவி செய்பவருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.