சினிமா ஸ்டைலில்...அரசு ஊழியர்களை மிரட்டும் அதிகாரி : வைரலாகும் ஆடியோ
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளராக இருப்பவர் கந்தசாமி. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி என்றழைக்கப்படும் ஐஏஎஸ்-ல் சேர்ந்தார். அதன்பின்னர் 2017 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிட்டார்.
இந்நிலையில் ஆட்சியர் கந்தசாமி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு ஆடியோதான் இப்போதைய ஹாட் நியூஸ் ஆக உள்ளது.
அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் தொய்வு இருப்பதாகத் தெரிந்த அவர் ஊழியர்களிடன் கண்டிப்பு காட்டியுள்ளார். மேலும் அந்த ஆடியோவில் 'எத்தனை ஊழிர்களை சஸ்பெண்ட் செய்வேன் எனக்கே தெரியாது' என்ற தொனியில் கோபத்துடன் பேசியுள்ளதாகத் தெரிகிறது. அதனால் அதிகாரிகள் வட்டத்தில் களக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.