ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (21:33 IST)

விரைவில் திரெளபதி 2 வெளிவரும் கரூரில் திரெளபதி திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு

விரைவில் திரெளபதி 2 வெளிவரும் கரூரில் திரெளபதி திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு
கரூரில் அகில இந்திய வேளாளர் / வெள்ளாளர் கூட்டமைப்பு என்கின்ற பெயர் மாற்றம் ! நான்குதிசை வேளாளர்கள் சங்கமாக பெயர் மாற்றம் ! திரெளபதி படக்குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
அகில இந்திய வேளாளர் / வெள்ளாளர் கூட்டமைப்பு என்ற பெயரை நான்கு திசை வேளாளர்கள் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் 80 அடி சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் த.கார்வேந்தன், மாநில பொருளாளர் மணீஸ் க.மகேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலின் போது நான்கு திசை வேளாளர்களின் பங்களிப்பு எவ்வாறாக இருக்க வேண்டுமென்றும் கலந்தாலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட, திரெளபதி படக்குழுவினர்  வெள்ளக்கோயில் பகுதியினை சார்ந்த திரெளபதியின் முதல்நிலை துணை  இயக்குநர் சிவா கந்தசாமி மற்றும் நடிகரும், துணை இயக்குநருமான திருநெல்வேலியினை சார்ந்த விக்ரமசிங்கபுரம் பகுதியினை சார்ந்த ஆறு பாலா ஆகியோர் இந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசினர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, திரெளபதி படக்குழுவின் துணை இயக்குநர்., சிவா கந்தசாமி திரெளபதி படம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. தொடர்ந்து இதே போன்று நல்ல திரைப்படங்கள் வரவேண்டுமென்றதோடு, இதே போன்று நாடக காதல் என்கின்ற பெயர்கள் போல, பல கருத்துக்கள் இருக்கின்றதாகவும், இந்த நான்கு திசை வேளாளர் அமைப்பு நல்ல அமைப்பாகவும், அடுத்த தேர்தலினை நிர்ணயிக்க கூடிய ஒரு நல்ல அமைப்பு என்றார். மேலும் திரெளபதி திரைப்படத்தினை போல் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இதனை தொடர்ந்து பேசிய, இந்த திரைப்படத்தின் நடிகரும், துணை இயக்குநருமான ஆறுபாலா செய்தியாளர்களுக்கு பேசிய போது., திரெளபதி திரைப்படம் மிகப்பெரிய ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், சில அரசியல் சூழ்ச்சிகளால் ஒற்றுமையினை சீர்கெடுக்கும் வகையில் அமைந்த நிலையில் அதை சுட்டிக்காட்டியதோடு, விரைவில் திரெளபதி திரைப்படம் 2 வது பாகம் மிக விரைவில் வெளிவரும் என்றார். மிகுந்த வெற்றியடைய செய்த அனைத்து மக்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது நான்கு திசை வேளாளர்கள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் த.கார்வேந்தன், மாநில தலைவர் தேவராஜ், மாநில  பொருளாளர் மணீஸ் க.மகேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.