வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 மே 2018 (22:10 IST)

கமல் கட்சியின் விசில் செயலியில் பதிவான முதல் புகார்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னரும், ஆரம்பித்த பின்னரும் டுவிட்டரில் அவ்வப்போது ஆக்ரோஷமான, அதே நேரத்தில் சமூக அக்கறையுடன் கூடிய கருத்துக்களை தெரிவித்து வருவது தெரிந்ததே.
 
இந்த நிலையில் கமல்ஹாசன் சமீபத்தில் விசில் என்ற செயலியை அறிமுகம் செய்தார். இதில் சமூகத்தில் நடக்கும் தவறுகள் குறித்து சுட்டிக்காட்டலாம் என்றும், அந்த தவறுகளை களைய சம்பந்தப்பட்ட துறைக்கு புகார்கள் அனுப்பப்படும் என்றும் கூறியிருந்தார்
 
இந்த நிலையில் விசில் செயலியில் முதல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர், அங்கிருக்கும் ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுத்துவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது: மக்கள் நீதி மய்யம்பெருமளவு வேலை வாய்ப்புகள் வழங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல.ஆனால் வணிகம் மற்றும் வேலை வாய்ப்பின் பெயரில் நிகழும் கொடுமையான மாசுகளுக்கு எதிரானது. அரசு இது போன்ற பொறுப்பற்ற மாசுக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அனகாபுத்தூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை தேவை! தொழில்கள் மெல்லச் சாகக்கூடாது... மக்களும் தான்