திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (17:00 IST)

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி: கமல் ட்விட்..

காவிரி மேலாண்மை வாரியம் வரைவுத் திட்டத்தை சமர்பிக்க மேலும் இரண்டு வாரக் கால அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

 
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. 
 
கர்நாடகாவில் சட்ட பேரவைத்தேர்தல் நடைபெறப் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. 
 
இந்த வழக்கு கடந்த 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, வரைவு திட்ட அறிக்கையை மே 3 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறது. 
 
இந்நிலையில், நடிகரும் மக்கள் மய்யத்தில் தலைவருமான கமல் காட்டமான ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு. "தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி" இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.