1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 30 ஏப்ரல் 2018 (13:58 IST)

ரஜினிகாந்த் தான் அடுத்த முதலமைச்சர்: கமல் சகோதரர்

ரஜினியும் கமலும் சேர்ந்து கட்சி ஆரம்பித்தால் கூட தமிழகத்தில் அவர்களால் 5% வாக்குகளை கூட பெற முடியாது என கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார் என்பது தெரிந்ததே.
 
இந்த  நிலையில் சாருஹாசன் தனது முகநூலில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் தான் என ரஜினியை மறைமுகமாக கூறியுள்ளார். சாருஹாசனின் இந்த கருத்து கமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் தந்துள்ளது.
 
இதுகுறித்து சாருஹாசன் தனது ஃபேஸ்புக்கில் கூறியதாவது: கர்நாடகாவை சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர். இதை ஒப்புக் கொள்ளாதவர்கள் என்னை முட்டாள் என்று அழைக்கலாம். இந்த ஆண்டு உங்களை நான் புரிந்து கொள்வேன். அடுத்த ஆண்டு நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று கூறியுள்ளார்.