1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Updated : சனி, 20 டிசம்பர் 2025 (20:49 IST)

திமுகவுக்கு சாவு மணி அடிச்சாச்சி!.. மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!...

murugan
திருப்பரங்குன்றத்தின் மலையில் ஒரிடடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணி கட்சியினரும், பாஜகவினரும் சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனும் அவர்களுக்கு ஆதரவாக உத்தரவை பிறப்பிக்க அந்த இடத்தில் தீபம் ஏற்ற அவர்கள் அங்கே சென்றனர். ஆனால் 144 தடை உத்தரவு இருப்பதாக கூறி போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அந்த இடம் போராட்டக் களமாக மாறியது.

தற்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கோவிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் ஒரு தனி நபர் முடிவு செய்து வழக்கு தொடர முடியாது என தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், இஸ்லாமியருக்கு சொந்தமான மசூதி இருக்கும் இடத்தின் அருகில் இவர்கள் தீபம் ஏற்ற முயற்சி செய்கிறார்கள். இதன்மூலம் மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாகவும் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது.

ஒருபகக்ம், திருப்பரங்குன்றத்தில் அந்த இடத்தில் தீபம் ஏற்ற சொல்லியும், திமுக அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும் பூர்ண சந்திரன் என்பவர் மதுரை போலீஸ் அவுட்போஸ்ட் பூத்திற்குள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதோடு அவர் பேசிய ஆடியோவும் வைரலானது.


இந்நிலையில் இன்று செய்தியாளிடம் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன் ‘முருக பக்தர்கள் உணர்வை மதிக்காமல் திமுக நடந்து கொண்டதால் தீக்குளிப்பு சம்பவம் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அராஜக ஆட்சி நடக்கிறது.. திமுகவிற்கு சாவு மணி அடிச்சாச்சி.. வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திமுக வீட்டுக்கு செல்லும்’ என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.