1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thaniyarasu MLA met sasikala

சசிகலாவை சந்தித்த தனியரசு எம் எல் ஏ!

அதிமுக
சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் சசிகலாவை தனியரசு எம் எல் ஏ சென்று சந்தித்து பேசியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் சற்று முன் அவர் சென்னைக்கு வருவதற்காகக் பெங்களூரில் இருந்து கிளம்பினார். அவரது வரவால் அதிமுகவில் சில சலசலப்புகள் எழுந்தன. அதிமுகவில் பொறுப்பில் இருக்கும் சிலரே அவருக்கு போஸ்டர்களும் அடித்து ஒட்டினர்.

இதையடுத்து நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சசிகலாவை பலரும் சென்று சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் சீமான், பாரதிராஜா மற்றும் அமீர் ஆகியோர் அவரது இல்லத்தில் சென்று சந்தித்தனர். இந்நிலையில் இன்று  தமிழ்நாடு கொங்கு பேரவை கட்சியின் எம்.எல்.ஏ தனியரசு சசிகலாவை சந்தித்துள்ளார். வரிசையாக அரசியல் வாதிகள் அவரை சென்று சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைந்து 25 ஆண்டுகளாகிவிட்டன- மோடி