முழு அரசியலில் கால் வைக்கும் உதயநிதி! – தேர்தலில் போட்டியிட விருப்பமனு!
தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவெல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் உதயநிதி விருப்ப மனு அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. கூட்டணி முடிவுகளுக்கு முன்னதாகவே தேர்தல் பரப்புரையில் பிஸியாகிவிட்ட திமுக தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் – திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார்.