செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (15:37 IST)

சசிகலாவை சந்தித்த சீமான் மற்றும் பாரதிராஜா!!

மறைந்த  முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை இன்று அவரது இல்லத்தில் சீமான்,மற்றும் பாரதிராஜா ஆகிய இருவரும் சந்தித்தனர்.

தமிழக அரசியல் களம் சிறையில் இருந்த சசிகலா வெளியே வந்த பின்னர், பிடித்துள்ளது.
இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளையும், பிரச்சாரத்தையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ்-ஐ தங்களுடன் வந்து இணைந்துகொள்ளும்படி தினகரன் கூறினார். ஆனால் இதுகுறித்து ஒ.பன்னீர்செல்வம் எதுவும் கருத்துத்தெரிவிக்கவில்லை. எனினும் அதிமுக முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் இணைந்துகொள்ளவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் , அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழத்துகளும் பாராட்டுகள் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஜெயலலிதாவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.