1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. thambidurai mp replied to kerala mp in parliment

எந்த அம்மா?!.. பாராளுமன்றத்தில் கலாய்த்த கேரள எம்.பி!.. தம்பிதுரை கொடுத்த ரியாக்சன்!..

jayalalitha
அதிமுகவினரால் அம்மா என அன்போடு அழைக்கப்பட்டவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. சினிமாவில் நடிகையாக இருந்து எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் நுழைந்தவர் இவர். எம்ஜிஆரின் மறைவுக்கு பின் அதிமுகவை கைப்பற்றி அந்த கட்சியை வளர்த்தவர் அவர்.

இந்திய அளவில் ஒரு முக்கிய ஆளுமை உள்ள ஒரு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தார். தமிழகத்தில் உள்ள பெண்களும் அவரை அம்மா என்றே அழைத்தார்கள். ஜெயலலிதா காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் இப்போதும் பல ஏழைகளின் பசியை போக்கி வருகிறது.  அவருக்கு பின் திமுக, தவெக என ஆட்சிகள் மாறினாலும் அம்மா என்கிற பெயரை யாரும் மாற்ற முடியவில்லை. அதுதான் அவரின் சக்தியாக பார்க்கப்படுகிறது..

ஒருபக்கம் இப்போது வரை அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் போன்றவர்கள் ஜெயலலிதாவை பெயர் சொல்லி குறிப்பிடுவதில்லை. ‘அம்மா’ என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பி தம்பிதுரை பேசிக் கொண்டிருந்தபோது ‘அம்மா’ என்று குறிப்பிட்டு பேசினார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த கேரளா எம்.பி ‘எந்த அம்மா?’ ‘ எந்த அம்மா?’ என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். இதில் கோபமடைந்த தம்பிதுரை ‘உன்னுடைய அம்மா’ என சொல்லி அவரின் வாயை அடைத்தார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தவெக இமேஜை அடிச்சி காலி பண்ணனும்!.. பக்கா ஸ்கெட்ச் போடும் உதயநிதி!...