1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thangam thennarasu comment about formers debit

இப்பதான் ஆர்.பி.ஐ ரூல்ஸ் தெரியுதா?!.. என்னா ஏமாத்துறீங்களா?!.. தங்கம் தென்னரசு ஆவேசம்..

vijay
விவசாயக்கடன் தொடர்பாக தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கருக்கு கீழே வைத்திருக்கும் விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி எனவும், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளின் கடனில் 50 சதவீத தள்ளுபடி எனவும் அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பெண் 5 ஏக்கருக்கு கீழே இருப்பவர்களுக்கு 5 ஆயிரம் தள்ளுபடி அதற்கு மேலே இருப்பவர்களுக்கு 25 ஆயிரம் தள்ளுபடி என அறிவித்தது. இது விவசாயிகளிடம் கடும் அதிருத்தியை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ‘ இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின் படிதான் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என தவெக அமைச்சர் கூறியிருந்தார்.

தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் போது வராத ரிசர்வ் வங்கி விதிமுறைகள் மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும் போது மட்டும் எங்கே இருந்து திடுமென குதித்து வருகின்றன? இது நிர்வாக திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா?’ என கேள்வி எழுப்பி இருக்கிறார்