தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்..!
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தேதி குறித்த அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ளார். பிப்ரவரி 17-ஆம் தேதி காலை 9 மணிக்கு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
தேர்தல் நெருங்கும் வேளையில், அரசின் அன்றாட செலவுகளை கவனிப்பதற்கான இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 20-ஆம் தேதி அன்று முன் பண மானியக் கோரிக்கைகளும், கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளும் பேரவையில் முன்வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து பிப்ரவரி 16-ஆம் தேதியே முடிவு செய்யப்படும்.
முழு பட்ஜெட்டிற்கு பதிலாகத் தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில், பொதுமக்களை கவரும் வகையிலான முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
