வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (13:12 IST)

மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு ஏன்? தம்பிதுரை விளக்கம்

பாஜகவுடன் திமுக ரகசிய உறவு வைத்திருப்பதாகவும், பாராளுமன்ற தேர்தலின்போதோ அல்லது தேர்தலுக்கு பின்னரோ பாஜகவுடன் கூட்டணி சேர  திமுக விரும்புவதாக அதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை திடீரென அதிமுக எம்பி தம்பிதுரை சந்தித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திமுகவுடன் ரகசிய உடன்பாடு வைத்து கொள்ளவே தம்பித்துரை ஸ்டாலினை சந்தித்தாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த தம்பிதுரை, 'நான் தனி விமானத்தில் செல்ல முடியாது. விமான நிலையத்துக்குச் செல்லும்போது  மாற்று கட்சி தலைவர்களை சந்திப்பது தவிர்க்க இயலாத ஒன்று.

நானும் மு.க.ஸ்டாலினும் விமான நிலையத்தில் சந்தித்து கொண்டதை  வைத்து எங்களுக்கும் திமுகவுக்கும் கூட்டணியா என்று கூறுவது அபத்தமானது. எனினும் கே.என்.நேருவின் இந்த கேள்விக்கான விளக்கத்தை மு.க.ஸ்டாலின்தான் கூற வேண்டும். அல்லது, அதுதொடர்பாக கே.என்.நேருதான் மு.க.ஸ்டாலினிடம் கேட்க வேண்டும் என்று கூறினார்