ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 செப்டம்பர் 2018 (22:46 IST)

ராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர்: நிதியமைச்சர் அருண்ஜெட்லி விமர்சனம்

பாராளுமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் வரவுள்ள நிலையில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் கட்சியினர்களும், ராகுல்காந்தி குறித்து பாஜகவினர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ள அருண்ஜெட்லி, 'ரஃபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரம், 15 பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறும் விவகாரம் என அனைத்திலும் ராகுல் காந்தி பொய்யையே கூறிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார். அருண்ஜெட்லியின் இந்த விமர்சனத்திற்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.