ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 செப்டம்பர் 2018 (20:56 IST)

போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் பலி

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆறு பேர் கொலை செய்யப்பட்டனர். இது சம்பந்தமாக முஸ்டாக்கிம் மற்றும் நவ்சாத் ஆகிய இரு குற்றவாளிகளை போலீஸார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களை பின் தொடர்ந்து சென்ற போலீஸார் அவர்களை துரத்தி பிடிக்க முற்பட்டனர்.

ஆனால் அவர்களை விரட்டி சென்ற போது ஒரு கட்டிட வளாகத்தில் புகுந்த  இருவரும் மறைந்து கொண்டு போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி என்கவுண்டர் செய்தனர்.

இந்த சம்பவத்தில்  காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.