1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thaadi balaji joined in a new party

இனிமே விஜயை நம்பி யூஸ் இல்ல!.. வேறு கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி...

thadi balaji
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி. 90களில் விஜயுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் விஜய் டிவியில் ஐக்கியமானார். விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கிய போது அந்த கட்சியில் ஆர்வம் காட்டி அந்த கட்சியில் சேர்ந்தார் தாடி பாலாஜி.

ஆனால் அவருக்கு அந்த கட்சியில் எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை. மேலும் தலைவர் விஜயை பார்க்கவே முடியவில்லை. அவரை சந்திக்க முயற்சி செய்தும் நடக்கவில்லை.. அதற்கு தடையாக புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். தவெகவில் பலரும் என்னைப் போலவே பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இதை தலைமை தெரிந்து கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் ஊடகங்களில் பேட்டி கொடுத்தார்.

ஆனாலும் விஜய் கண்டு கொள்ளவே இல்லை. இந்நிலையில்தான் தவெகவிலிருந்து விலகி லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் துவங்கியுள்ள புதிய கட்சியில் இணைந்துள்ளார். ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் ஜேசிஎம் என்கிற அமைப்பை நடத்தி வந்தார். கடந்த வாரம் லட்சிய ஜனநாயக கட்சி என்கிற அரசியல கட்சியை தொடங்கினார், அதில்தான் தாடி பாலாஜி தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.
thadi balaji

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த கட்சிக்காக தாடி பாலாஜி பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதார் அர்ஜுனா தவெகவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இந்நிலையில்தான் அவரின் மைத்துனர்துவங்கியுள்ள கட்சியில் தாடி பாலாஜி இணைந்திருக்கிறார்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்காவில் முறைகேடு.. கோவையில் அதிர்ச்சி