செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 மே 2021 (11:21 IST)

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு!

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக் கொண்டார். 

 
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த மே 7 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், மே 11 அன்று புதிதாக வெற்றி பெற்ற தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர். மறுநாள் 12 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
 
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.