14 நாளுக்கும் மொத்தமாய் வாங்கிட்டாங்க போலவே..! – 2 நாள் டாஸ்மாக் வசூல் இவ்வளவா?
தமிழகம் முழுவதும் இன்று முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைக்கட்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் இன்று முதல் 14 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 14 நாட்கள் டாஸ்மாக் கடைகளும் செயல்படாது என்பதால் கடந்த இரண்டு நாட்களாக மதுவிற்பனை வழக்கத்தை விட அதிகமாக நடந்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று டாஸ்மாக் வசூல் ரூ.428.69 கோடியாக இருந்துள்ளது. கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விற்பனையை சேர்த்து கடந்த இரண்டு நாட்களில் மொத்தமாக ரூ.854 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.